பள்ளிக்கு செல்லும் முன் மயங்கி விழுந்து பலியான சிறுவன் - பெற்றோர்களே உஷார்

Update: 2025-03-29 03:36 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மின்சாரம் தாக்கி ஆறாம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். மணிமங்கலத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரின் 12 வயது மகன், மதியம் பள்ளிக்கு செல்வதற்காக வாட்டர் ஹீட்டரில் தண்ணீர் சுட வைத்துள்ளான். அப்போது தண்ணீர் சுட்டு விட்டதா என்று கை வைத்து பார்த்த சிறுவன் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்துள்ளான். உறவினர்கள் அவனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்