Kunal Kamra VS Shinde | ஷிண்டேவை விமர்சித்த காமெடி நடிகர்... சென்னை ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

Update: 2025-03-29 03:46 GMT

மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கில், நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால முன்ஜாமீன் வழங்கியது. தாம் தற்போது விழுப்புரத்தில் வசித்து வருவதாகவும், மும்பை சென்றால் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என்றும் கூறி டிரான்சிட் முன் ஜாமீன் கேட்டு குணால் மனுத்தாக்கல் செய்தார். மனுவுக்கு ஏப்ரல் 7 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி மும்பை காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி எஸ் சுந்தர் மோகன், அதுவரை அவருக்கு இடைக்கால முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்