மரக்காணம் கலவர வழக்கில் பாமகவை சேர்ந்த 20 பேரை விடுதலை செய்து அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் கடந்த 2013ம் ஆண்டு நடந்த கலவரத்தில், பாமகவை சேர்ந்த 34 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கை விழுப்புரத்தில் செயல்படும் எஸ்சிஎஸ்டி நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கு தற்போது முடிவடைந்த நிலையில், அரசு தரப்பில் போதிய ஆதாரம் இல்லையென கூறிய நீதிமன்றம் இவர்களில் 20 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டது.