Salem College Bus | மரத்தில் மோதிய கல்லூரி பேருந்து - அலறி துடித்த மாணவிகள்.. 5 பேர் நிலை?
சேலம் அருகே தனியார் கல்லூரி பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவிகள் படுகாயமடைந்தனர். சேலம் அயோத்தியாபட்டினம் அருகே தனியார் மகளிர் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாணவிகளை ஏற்றிக் கொண்டு கிளம்பிய அக்கல்லூரி பேருந்து டி. பெருமாபாளையம் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தென்னை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஐந்து மாணவிகள் படுகாயமடைந்த நிலையில், அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..