Health Insurance Case | உயிரோடு விளையாடிய இன்சூரன்ஸ் நிறுவனம்.. ஆட்டத்தை அடக்கிய நுகர்வோர் கோர்ட்
திருநெல்வேலியை சேர்ந்த பெண்ணுக்கு மருத்துவ செலவினை வழங்க மறுத்த காப்பீட்டு நிறுவனங்கள், மருத்துவ செலவோடு இழப்பீடும் சேர்த்து வழங்க மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த தனலட்சுமி என்பவர் தான் மருத்துவ காப்பீடு பெற்ற நிறுவனங்கள் மீது மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிளாஸ்டோன் பிளஸ்டு தாகூர் மருத்துவ செலவிற்கான 58 ஆயிரத்து 119 ரூபாயை 9 சதவீத வட்டியுடன் வழங்குவதுடன், இழப்பீடாக1 லட்சத்து 10ஆயிரம் ரூபாயை வழக்கு செலவிற்கு வழங்க வேண்டும் எனவும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.