ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு அம்மன் பவானி ஆற்று நீரை கடந்து செல்லும் நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக பண்ணாரி அம்மனை சப்பரத்தில் வைத்து, மேளதாளம் முழங்க ஆற்றின் கரைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது பரிசலில் ஆற்றை கடந்து சென்ற அம்மனை இரு கரைகளிலும் கூடியிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு களித்தனர்.