சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட ஒன்பது ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு 2024-ம் ஆண்டில் மட்டும் 10 கோடியே 52 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயிலில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3 லட்சத்து 20 ஆயிரம் பேர் பயணிக்கின்றனர்.
2015 ஜூன் 29 முதல், 2024 டிசம்பர் 31 வரை 35 கோடியே 53 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டில் மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் 10 கோடியே 52 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
2023-ம் ஆண்டை விட 2024-ம் ஆண்டில் ஒரு கோடியே 41 லட்சம் பேர் அதிகமாக பயணித்துள்ளனர். இந்த தகவல்களை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது.