#BREAKING | ஞானசேகரன் வீட்டில் அலசி எடுத்த SIT..தோண்ட தோண்ட `எவிடனஸ்'..அதிர்ச்சி திருப்பம் |

x

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு, ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலத்தை பெற்றுள்ளனர்.ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஞானசேகரனிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து நேற்று ஞானசேகரனின் வீட்டில் சிறப்பு புலனாய்வு குழுவினர் சோதனை மேற்கொண்டு சொத்து ஆவணங்கள், பட்டா கத்தி, ஹார்ட் டிஸ்க், பென் டிரைவ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை இரண்டு அட்டை பெட்டிகளில் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.பட்டாக்கத்தியை குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட டிஜிட்டல் ஆவணங்களை சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பிய நிலையில் அதில் உள்ள தகவல்களை அடிப்படையாக வைத்து மீண்டும் ஞானசேகரனிடம் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். ஞானசேகரனின் தார் ஜீப் மற்றும் பிரியாணி கொண்டு செல்ல பயன்படுத்தும் குட்டி யானை ஆகியவற்றை முறையாக பைனான்ஸ் கட்டாததால் நிறுவனத்தால் பறிமுதல் செய்து சென்றனர்.குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தும் இரு சக்கர வாகனத்தை மட்டும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்