ஊரே பார்க்க தலைமுடியை பிய்யும் அளவிற்கு பெண்ணை கொடூரமாக அடித்து இழுத்து சென்ற திருநங்கைகள்..

Update: 2025-01-05 05:55 GMT

நெல்லை மாவட்டம் களக்காட்டில், ஒரு பெண்ணை திருநங்கைகள் அடித்து இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

களக்காடு பெருமாள் கோயில் அருகில், வாடகை வீட்டில் வசித்து வரும் பெண்ணை திருநங்கைகள் சிலர், ரோட்டிற்கு இழுத்து வந்து கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த பின்னர் அந்தப் பெண் விடுவிக்கப்பட்டார். திருநங்கை ஒருவரின் சகோதரருக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் இந்த பெண்ணுக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், அதுகுறித்து கேட்டபோது கைகலப்பாகி, அந்தப் பெண்ணை திருநங்கைகள் சேர்ந்து அடித்து நடுரோட்டில் இழுத்துச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், பெண்ணை திருநங்கைகள் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்