உலுக்கிய விக்கிரவாண்டி சிறுமி மரணம்..பள்ளி தாளாளர், முதல்வருக்கு தீவிர சிகிச்சை..தற்போதைய நிலை என்ன?
விக்கிரவாண்டி தனியார் பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வருக்கு, அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளி மாணவி கழிவுநீர் தொட்டியில் இறந்து கிடந்த வழக்கில், பள்ளியின் தாளாளர் எமில்டா, முதல்வர் டோமோனிக் மேரி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவரையும் வரும் 10-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இருவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், பலத்த போலீஸ் பாதுகாப்போடு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.