ஆண்டின் முதல் ஜல்லிக்கப்பட்டு போட்டி நிறைவு
புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில், இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடந்து முடிந்தது. மொத்தம் 7 சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில், 475 காளைகளும், 300 மாடுபிடி வீரர்கள் களம் இறக்கப்பட்டனர். காளைகள் முட்டியதில் 40 பேர் காயமடைந்தனர். 12 காளைகளை அடக்கிய மதுரையை சேர்ந்த ஸ்ரீதரன் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டார். இதேபோல, முத்துச்சாமி என்பவரின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டது.
Next Story