24 மணி நேரம்.. “நான் ஸ்டாப் சேல்ஸ்.’’ - சென்னையில் போதையை குறைய விடாமல் ஏத்தும் குடிமன்கள்..
சென்னை போரூரில், எஸ்.ஆர்.எம்.சி. காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் சர்வ சாதாரணமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. கள்ளச் சந்தையில் மது விற்பனை நடைபெறும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டம் கூட்டமாக மதுப்பிரியர்கள் முண்டியடித்து வாங்கிச் சென்று மதுக் கடையில் அமர்ந்து மது அருந்தும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.. இதுகுறித்து பல முறை புகாரளித்தும் பயனில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அதிகாரிகள் இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.