"சங்கிகளின் ஸ்லீப்பர்செல்ஸ்க்கு இதுதான் வேலை.." - ஓப்பனாக உடைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

Update: 2024-12-23 04:29 GMT

சங்கிகளின் ஸ்லீப்பர் செல்களும் வெறுப்பை பரப்புகிறார்கள் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சென்னையை அடுத்த பரங்கிமலையில் சமத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா நடந்தது. இதில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தா.மோ.அன்பரசன், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, முன்னாள் மயிலை பேராயர் சின்னப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர், கிறிஸ்துமஸ் குடிலை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்த‌தும் கிறிஸ்துமஸ் கேக் வெட்டப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், கிறிஸ்துமஸ் என்றாலே தனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்