சாதிப் பெயரைக் கூறி, ஜல்லிக்கட்டில் காளை அவிழ்க்க தடை விதிக்கக் கோரிக்கை

Update: 2024-12-23 08:30 GMT

ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை சாதிப் பெயரைச் சொல்லி அவிழ்க்க வேண்டாம், தேர்தல் வாக்குறுதி படி, காளை வளர்ப்போருக்கு ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள் அரசுக்கு வைக்கப்பட்டு உள்ளன. இது குறித்து பார்க்கலாம்..விரிவாக..

VT

தஞ்சாவூர் அருகே உள்ள துலுக்கம்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்போர் தான், இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளனர். 2025 புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு அளிக்கும் பயிற்சிகள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன.

பாரம்பரியத்தை காக்க வேண்டும் என்பதற்காக, எந்த விதமான வருமானமும் இல்லாவிட்டாலும், ஜல்லிக்கட்டு காளைகளுக்கு வேண்டிய தீவனங்களையும், உரிய பயிற்சிகளையும் அளித்து குழந்தைகளைப் போல காளைகளை பாதுகாத்து வருகின்றனர்.

ப்ரீத்..

பொங்கல் பண்டிகையை ஒட்டி நடக்கும் ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் இருந்து கால்களால் மண்ணை வாரிக் கொண்டு சீறிப்பாயும் காளைகளை, திமிலைப் பிடித்து அடக்க போட்டிப் போட்டுக் கொண்டு மாடுபிடி வீரர்களின் துணிச்சலோ, காண்போரையும் சிலர்க்க வைக்கும்.

காளைகளுக்கு உணவாக பருத்திக்கொட்டை, தவிடு, கடலை புண்ணாக்கு, உளுத்தம் பொட்டு, துவரம் பொட்டு, நாட்டுப்புல், வைக்கோல் உள்ளிட்டவை உணவாக வழங்கப்படுவதாக கூறுகிறார், ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் மணிகண்டன்..

Tags:    

மேலும் செய்திகள்