சென்னையில் குடிபோதையில் இருந்தவரை கீழே தள்ளி கொ*ல செய்து நடந்து செல்லும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி
சென்னை திருமயிலை பறக்கும் ரயில் நிலையத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆண் சடலத்தை
ரயில்வே போலீசார் கைப்பற்றி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், மயிலாப்பூரை சேர்ந்த லூயிஸ் மத்தியாஸ் ஆரோக்கியராஜ் என்பது தெரியவந்தது. கடந்த 17 ஆண்டுகளாக வீட்டை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்த இவர், சம்பவத்தன்று திருமலை ரயில் நிலையத்தில், பயணிகள் அமரும் இடத்தில் மதுபோதையில் உறங்கி உள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த மற்றொரு நபர், உட்காரும் இடத்தில் உறங்குவது குறித்து கேள்வி எழுப்பியதால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில், லூயிஸ் மத்தியாஸ் மேலே இருந்து கீழே விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து திருவான்மியூர் ரயில்வே போலீசார், சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், முண்டகக்கண்ணி அம்மன் கோவில் ரயில் நிலைய வாயிலில் அமர்ந்திருந்த திண்டிவனத்தை சேர்ந்த சேட்டு என்பவரை கைது செய்தனர். மதுபோதையில் தகாத வார்த்தைகளில் திட்டிக்கொண்டதால் ஆத்திரத்தில் தாக்கியதாகவும், அதனால் அவர் கீழே விழுந்த பயத்தில் அங்கிருந்து தப்பி ஓடியதாகவும் சேட்டு வாக்குமூலம் அளித்துள்ளார். அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.