சென்னை முழுக்க ஒரே பயண அட்டை...சில்லறை தொல்லை இனி இல்லை...பயணிகளுக்கு வந்த குட் நியூஸ்
சென்னை முழுக்க ஒரே பயண அட்டை...சில்லறை தொல்லை இனி இல்லை...பயணிகளுக்கு வந்த குட் நியூஸ்
பொது போக்குவரத்திற்கான ஒரே பயண அட்டை திட்டத்தை மாநகரப் போக்குவரத்து கழகத்தில் பாரத் ஸ்டேட் வங்கியின் மூலம் சிங்காரச் சென்னை பயண அட்டையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிமுகப்படுத்தினார்...
மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அனைத்துப் பேருந்துகளிலும், ஏற்கனவே சிங்கார சென்னை பயண அட்டையை பயன்படுத்தும் வகையில், ETM எந்திரம் உபயோகத்தில் உள்ளது... இத்திட்டத்தின் முதற்கட்டமாக 50 ஆயிரம் அட்டைகள் SBI மூலம் கட்டணமின்றி வழங்கப்படுகிறது... இந்த அட்டை கோயம்பேடு, பிராட்வே, சென்ட்ரல் ரயில் நிலையம், தாம்பரம், பூந்தமல்லி, திருவான்மியூர், செங்குன்றம், வேளச்சேரி, கிண்டி, ஆவடி, தியாகராயநகர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பத்தூர் ஓல்ட் டவுன், அடையாறு, அய்யப்பன்தாங்கல், கிளாம்பாக்கம், வடபழனி, ஸ்ரீபெரும்புதூர், பெரம்பூர், சைதாப்பேட்டை ஆகிய பேருந்து நிலையங்களில் உள்ள மாநகர் போக்குவரத்துக் கழக பயணச்சீட்டு விற்பனை மையங்களின் வாயிலாக வழங்கப்பட உள்ளது...மேலும் கட்டணமின்றி வழங்கப்படும் அட்டைகளை, ரீசார்ஜ் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்... இந்த சிங்கார சென்னை பயண அட்டையை நடத்துநர்களிடமும் ரீசார்ஜ் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது...