பட்டமளிப்பு விழாவில் 'பாரத் மாதா கி ஜே' கோஷம் - சலசலப்பு | Chennai

Update: 2025-01-04 07:17 GMT

மருத்துவத் துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.தமிழ்நாடு அரசு சென்னை பல் மருத்துவக் கல்லூரியின் 67வது பட்டமளிப்பு விழா, பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, 95 பல் மருத்துவ மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறையில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களை சுட்டிக்காட்டினார். மேலும், மருத்துவத் துறையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்