பைக்கிலேயே சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்.. டோல் கேட்டை கடக்க தனி வழி
தீபாவளியை கொண்டாட இருசக்கர வாகனங்களில் படையெடுத்தவர்களை போலீசார் தனி வழியில் பிரித்து அனுப்பினர்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வசித்து வரும் வெளி மாவட்ட மக்கள், தீபாவளியை கொண்டாட நேற்று இரவு ரயில்கள், பேருந்துகள் மூலமாக சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். 28ந் தேதி முதல் நேற்றிரவு வரை மொத்தம் 10 ஆயிரத்து 784 பேருந்துகளில் 5 லட்சத்து 76 ஆயிரத்து 358 பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக பக்கத்து மாவட்டங்களில் வசித்து வருபவர்கள் தங்களது இருசக்கர வாகனங்களில் குடும்பத்துடன் புறப்பட்டு சென்றனர். செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடி வழியாக ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தடுக்கும் வகையில் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கான தனியாக பாதை உருவாக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் ஒலிபெருக்கி மூலமாகவும் தகவல்களை கொடுத்த வண்ணம் இருந்தனர்.