1 டன் எடை காரை வாயில் கடித்து இழுத்து சென்ற சிறுமி- ஸ்கேட்டிங்கில் அசத்திய மாணவி | Skating | Tenkasi

Update: 2025-01-04 12:47 GMT

தென்காசியில் ஒரு டன் எடை கொண்ட காரை கயிற்றை கட்டி, பற்களால் இழுத்தபடி ஸ்கேட்டிங் செய்த மாணவி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார் . தென்காசி மாவட்டம் குற்றாலத்தை சேர்ந்தவர் வர்ஷா. தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் இவர் சிறுவயதில் இருந்தே ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் குத்துக்கல்வலசை பகுதியில் நடைபெற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு சாதனை முயற்சியில் கலந்து கொண்ட இவர், ஒரு டன் காரை, கயிற்றால் கட்டி, ஸ்கேட்டிங் செய்தபடியே தன் பற்களால் கடித்து இழுத்துச் சென்றார். 150 மீட்டர் வரை கார் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் பெற்றோர்களும், சக மாணவர்களும் அவரது உலக சாதனை முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்