சிவகங்கை அருகே ஜல்லிக்கட்டுக்காக அழைத்து வந்த மாடுகளை அவிழ்த்து விட்டதில், 87 பேர் காயமடைந்த நிலையில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டுப்பட்டி கிராமத்தில் உள்ள பழைய அந்தோணியார் ஆலயத்தில், ஆண்டுதோறும் தை நான்காம் தேதி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அந்த வகையில், நடைபெற்ற பொங்கல் விழாவில், மத வேறுபாடுகள் இன்றி ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். மேலும், பொங்கல் விழாவிற்கு வருகை தந்தவர்களுக்கு, ஊர் பொதுமக்கள் விருந்து வைத்து வயிறார உணவளித்தனர். இதனை தொடர்ந்து, ஜல்லிக்கட்டுக்காக அழைத்து வரப்பட்ட 300க்கும் மேற்பட்ட கட்டு மாடுகளை, உரிமையாளர்கள் பொது வெளியில் அவிழ்த்து விட்டனர். இதில் 87 பேர் காயம் அடைந்த நிலையில், கோவினிப்பட்டியை சேர்ந்த காளை உரிமையாளரான பூமிநாதன், தனது காளையே முட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார்..