"ஞானசேகரன் பற்றி வெளிவரும் தகவல்கள்...போட்டோஸ்" - கடும் கோபத்தில் ஈபிஎஸ்
மாணவிக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை கைது செய்ததற்காக திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலை வளாக பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டியும்,
சிறுமிகள், கல்லூரி மாணவிகள், பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்கியுள்ள திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்ததற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஞானசேகரன் குறித்து வெளிவரும் புகைப்படங்கள் மற்றும் தகவல்களால், இந்த வழக்கில் திமுக ஏதேனும் அரசியல் தலையீடு ஏற்படுத்துமோ என்ற சந்தேகம் வலுப்பதாக கூறியுள்ளார்.
அனைத்து உண்மைக் குற்றவாளிகளும் பிடிபட்டு பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுகவின் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.