சென்னையை உலுக்கிய கொலை... கண்டம்துண்டமாக கூறு போடவைத்த ஒற்றை வார்த்தை சிறுவன் உட்பட சிக்கிய நால்வர்
சென்னை காசிமேடு சிங்காரவேலர் நகர் 1வது தெருவை சேர்ந்தவர் குமரன். கடலில் மாலுமியாக இருந்து வரும் குமரன் புத்தாண்டின் போது தனது நண்பர் ராகேசுடன் உணவு வாங்கிச் சென்றார். அப்போது வழியில் இருந்து நான்கு பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர். இதில் ஒருவர் மட்டும் முகமூடி அணிந்திருந்த நிலையில், குமரன் யார் என விசாரித்துள்ளார். இதில் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மது அருந்திக் கொண்டிருந்த மூவரும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குமரனை வெட்டியுள்ளனர். இதனை தடுக்க முயற்சித்த நண்பர் ராகேஷை வயிற்றில் வெட்டியுள்ளனர். சத்தம் கேட்டு வந்த குமரனின் தந்தை விஸ்நாதனையும் தலையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். குமரனை சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில் போலீசார் குற்றவாளிகளை தேடிவந்தனர். பின்னர் அதே பகுதியை சேர்ந்த பட்டு சரவணன், ஆகாஷ், அபினேஷ், 17 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்ய சென்ற போது, தப்பிக்க முயற்சித்த பட்டு சரவணன் மற்றும் ஆகாஷ் இருவருக்கும் கைகளில் காயம் ஏற்பட்டது. கைது செய்யப்பட்டு நான்கு பேரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.