#JUSTIN | நீதிபதி முன் நேரில் நின்ற செந்தில் பாலாஜிக்கு க்ரீன் சிக்னல்-பறந்த உத்தரவு

Update: 2025-01-02 13:25 GMT

அமலாக்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட டிஜிட்டல் ஆவணங்களின் நகலை அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பிற்கு அளிக்க அமலாக்கத் துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரல் பறிமுதல் செய்யப்பட்ட

டிஜிட்டல் ஆவணங்களின் நகல்களை வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

டிஜிட்டல் ஆவணங்கள் எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின் வசம் உள்ளதால் அமலாக்கத்துறையால் வழங்க இயலாது என்று அமலாகத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன், பறிமுதல் செய்து தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட டிஜிட்டல் ஆவணங்களின் நகலை அமைச்சர் செந்தில் தரப்பிற்கு அளிக்க அமலாகத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கின் விசாரணைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகி இருந்தார்.

பின்னர் வழக்கின் விசாரணையை ஜனவரி 20ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்