பாங்காக்கில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி பரிசோதித்தனர். அப்போது வடமாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சுற்றுலா பயணியாக தாய்லாந்து நாட்டிற்கு சென்று திரும்பி வந்தார். அவரது உடமைகளை சோதனை செய்தபோது,14 பார்சல்கள் இருந்தன. அதில் காலிபிளவர் மற்றும் மஸ்ரூம் இடையே உயர்ரக பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். சுமார் 6 கிலோ எடை கொண்ட அந்த உயர்ரக கஞ்சாவின் மதிப்பு 6 கோடி ரூபாய். இதையடுத்து, அந்த பெண் கைது செய்யப்பட்டார்.