கோயில் வாசலில்... வியாபாரியை பிளேடால் வெட்டிய யாசகர்... சங்கரன்கோவிலில் அதிர்ச்சி

Update: 2025-01-02 13:31 GMT

சங்கரன்கோவில், சங்கரநாராயண சுவாமி கோயில் முன்பு மது போதையில் இருந்த யாசகர் வியாபாரியை பிளேடால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் யாசகம் பெறுபவருக்கும், சண்முகம் என்ற வியாபாரிக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த யாசகம் பெறுபவர், பிளேடால் வியாபாரியை சரமாரியாக வெட்டினார். இதில் அவரது கை, காது உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. வியாபாரி சண்முகம் உடனடியாக மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. யாசகர் மது போதையில் இருந்த நிலையில் போலீசார் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்