அண்ணா பல்கலை. விவகாரம்.. கடும் உத்தரவுடன் பறந்த சுற்றறிக்கை

Update: 2025-01-06 02:47 GMT

அண்ணா பல்கலை. விவகாரம்.. கடும் உத்தரவுடன் பறந்த சுற்றறிக்கை

அண்ணா பல்கலைக்கழக விடுதி நேரத்தில் மாற்றமில்லை என்றும், வளாகத்தில் மாணவர்கள் மிதிவண்டிகளை பயன்படுத்த வேண்டும் என்றும்

தெரிவிக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் சென்னையில் இயங்கக்கூடிய நான்கு கல்லூரிகளின் முதல்வர்களுக்கு, பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் ஆசிரியர்களும், மாணவர்களும் பின்பற்ற வேண்டிய நடைமுறை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை பல்கலைக்கழக வளாகத்தில் பயன்படுத்துவதை தவிர்த்து மிதிவண்டிகளை பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் வேலை பார்க்கும் தொழிலாளிகள், வேலை நேரத்திற்கு பிறகு தங்கக்கூடாது - வெளி ஆட்களின் வாகனங்கள் நிறுத்த அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.பாலியல் குற்றங்களை ஆய்வு செய்வதற்கான Posh கமிட்டி மாதாந்தோறும் கூட்டத்தை கூட்ட வேண்டும் - பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு பிறகு விடுதி நேரத்தில் கட்டுப்பாடு விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேர மாற்றம் இல்லை எனவும் பதிவாளர் தெரிவித்துள்ளார். Zomato, amazon, swiggy நிறுவன ஊழியர்கள் வளாகத்திற்கு உள்ளே வர அனுமதி இல்லை என்றும், அவர்கள் வாயில் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்