BREAKING || விமானப்படை தேர்வில் ஆள்மாறாட்டம்... சென்னை ஆவடியில் பரபரப்பு
ஆவடியில் நடைபெற்ற விமானப்படை கிளார்க் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வடமாநில இளைஞர் கைது.
3 லட்சம் பணம் தருவதாக கூறியதை தொடர்ந்து ஆள்மாறாட்டம் செய்து மாட்டிக்கொண்டது அம்பலம்.
ஹால் டிக்கெட்டில் வேறு ஒரு நபரின் புகைப்படம் இருந்ததை வைத்து பிடிபட்டார்..
மத்திய அரசுக்கு சொந்தமான பாதுகாப்பு படை துறைகளில் ஒன்றான விமான படை பயிற்சி மையம் ஆவடியில் செயல்பட்டு வருகிறது.இங்கு கிளார்க் பிரிவுகளில் ஆட்கள் தேர்வு நடைபெற்றது.இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்வு எழுத பலர் வந்திருந்தனர்.எழுத்து தேர்வு நேற்று நடைபெற இருந்த நிலையில் ஒவ்வொருவரின் ஹால்டிக்கெட் பரிசோதனை செய்யப்பட்டன.அப்பொழுது அந்த ஹால் டிக்கெட்டில் மகேந்திரா பிரபு என தேர்வர் பெயரும் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.ஆனால் நேரில் வந்திருந்த நபர் வேறு ஒருவராக இருந்ததால் சந்தேகத்தின் அடிப்படையில் விமானபடை அதிகாரிகள் அவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரித்ததில் டெல்லி அக்ராவை சேர்ந்த மகேந்திரபிரபு என்பவருக்கு பதிலாக ஹரியானா மாநிலத்தை சேர்ந்த சுஷில் என்பவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வந்தது தெரியவந்தது.
இதன் பின்னர் விமானபடை அதிகாரிகள் தங்கள் தரப்பு விசாரணையை முடித்து முத்தாபுதுபேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.அவனை கைது செய்த காவல்துறை கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞர் சுஷில் லிடம் இதில் வேறு யாருக்கு தொடர்பு உள்ளது, குழுவாக செயல்படுகிறார்களா கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.அதில் ஹரியானவை சேர்ந்த சுசில் மகேந்திரபிரபுவுக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி கொடுத்து, அதில் அவர் வெற்றிபெற்று பணி கிடைத்தால் 3 லட்சம் தர வேண்டும் என பேரம் பேசி இருந்தது அம்பலம் ஆகியது. இதனை தொடர்ந்து ஆள்மாறாட்டம் செய்த வடமாநில இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து முத்தாபுது பேட்டை போலீசார் அவனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மத்திய அரசு பாதுகாப்பு படை தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.