"நல்லா பளபளனு புதுசா இருக்கே" - அதிமுக கூட்டம் முடிந்ததும் வீட்டுக்கு தூக்கி ஓடிய மக்கள்
திருப்பூரில் நடந்த அதிமுக கூட்டம் முடிந்ததும் பொதுமக்கள் நாற்காலிகளை அள்ளிச் சென்றனர். பெருமாநல்லூரில் அதிமுகவின் 53வது ஆண்டு துவக்க விழா கூட்டம் நடைபெற்றது. முன்னதாக கூட்டத்துக்கு ஆள் சேர்க்கும் விதமாக, நலத்திட்ட உதவியாக நாற்காலிகள் தரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஆயிரத்து 500 நாற்காலிகள் நிரம்பும் அளவுக்கு பொதுமக்கள் வந்திருந்தனர். கூட்டம் முடிந்ததும் பொதுமக்கள் அனைவரும் அவரவர் அமர்ந்திருந்த நாற்காலிகளை தூக்கி தலையில் வைத்து கொண்டு, புறப்பட்டனர்.