அதிமுக தொடர்பாக, நிலுவையில் உள்ள வழக்குகள் முடியும் வரை, அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக டிசம்பர் 19 க்குள் எழுத்துப் பூர்வமான விளக்கத்தை அளிக்கும்படியும், டிசம்பர் 23இல், தேர்தல் ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், புகார்தாரர் சூர்யமூர்த்தி ஆகியோருக்கு, தலைமைத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த பதில் தனக்கு வழங்கப்படாதால், தனது மனுவை பரிசீலித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு மேலும் எட்டு வார கால அவகாசம் வழங்கக் கோரி சூரிய மூர்த்தி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மனு மீது முடிவெடுக்க கூடுதல் அவகாசம் வழங்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்தனர்.