பொறுக்க முடியாமல் வீதியில் இறங்கி போராடிய மக்கள்... பரபரப்பில் விழுப்புரம்

Update: 2024-12-20 14:35 GMT

விழுப்புரம் திண்டிவனம் பகுதியில் வெள்ள நிவாரண நிதி கேட்டு பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டிவனம் பகுதியில் மேல்பாக்கம் கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதி மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நிலையில், இன்னும் வெள்ள நிவாரண நிதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள், அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், போராட்டம் திரும்ப பெறப்பட்டது. இதே போன்று, அம்மன் குளத்து மேடு கிராமத்தை சேர்ந்த மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு நிவாரண நிதி கேட்டு அரசு பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறையினர், போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதில் கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்