10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு - மாணவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

Update: 2024-12-20 14:23 GMT

11 மற்றும் 12 ஆம் வகுப்பு தனித்தேர்வு மாணவர்கள் வழக்கமான கட்டணத்துடன் கூடுதலாக ஆயிரம் ரூபாய் சிறப்பு கட்டணம் சேர்த்து செலுத்த வேண்டும் என்றும், பத்தாம் வகுப்பு மாணவர்கள், வழக்கமான கட்டணத்துடன் 500 ரூபாய் கூடுதலாக கட்ட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. வருகிற 23, 24, 26 ஆகிய மூன்று தினங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இணைய வழியாக விண்ணப்பிக்கலாம் என்றும், இது குறித்த முழுமையான விவரங்களையும், சேவை மையங்கள் குறித்த விவரங்களையும், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறியலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அரசு தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு மாணவர்கள் நேரில் சென்று இணைய வழியாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்