தட்டி கேட்டவருக்கு கத்திக்குத்து.. திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம்

Update: 2024-12-20 14:40 GMT

திருப்பூர் மாவட்டம் அ.குரும்பாளையம் பகுதியை சேர்ந்த கணேசன் - சுதா தம்பதியினரின் மகன் சத்தியவாசன், அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் மோகன்ராஜ் என்பவர், தனது காரில் சிறுவன் கைவைத்து கிறுக்கியதாக கூறி, வீட்டிற்குள் அழைத்து சென்று அவனை தாக்கியுள்ளார். வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் சிறுவனை தேடி அவரது உறவினர்கள் சென்ற போது, மோகன்ராஜ் சிறுவனை தாக்கியது தெரியவந்தது. மோகன்ராஜுக்கும், சிறுவனின் உறவினர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அவர்களை கத்தியால் குத்திவிட்டு இளைஞர் தப்பியுள்ளார். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசார் மோகனராஜை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்