``25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு..'' - அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்

Update: 2024-12-20 14:26 GMT

தமிழ்நாட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை 2020இல் 14.18

கோடியாக இருந்து, 2023இல் 28.71 கோடியாக உயர்ந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாவின் பங்களிப்பை 12 சதவீதமாக உயர்த்து நோக்கத்தில் தமிழ்நாடு சுற்றுலா கொள்கை அமல்படுத்தப்படுவதாக தெரிவித்தார். இதன் மூலம் தமிழகத்தில் சுற்றுலா மற்றும் அதனைச் சார்ந்துள்ள தொழில்களில் 25 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்