``சீமானே கிளம்பு...'' சீமானை திடுக்கிட வைத்த கோஷம் - அதிர்ந்த அரங்கு... பரபரப்பு காட்சி
எண்ணூர் அனல் மின் நிலையம் விரிவாக்க திட்டம் தொடர்பான கருத்து கேட்டு கூட்டத்தில் சீமான் பேச்சுக்கு எதிர்ப்பு எழுந்ததால் சலசலப்பு ஏற்பட்டது
எண்ணூர் அனல் மின் நிலையம் விரிவாக்க திட்டம் தொடர்பாக அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், விரிவாக்கத்திற்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்து எண்ணூர் அனல் மின் நிலையம் சுற்றுச்சூழலை மாசாக்குகிறது, 3 வயது குழந்தைக்கு புற்று நோய் ஏற்படுகிறது என குற்றம் சாட்டினார். இயற்கை தாயின் மார்பை அறுத்து ரத்தம் குடிப்பதுதான் வளர்ச்சியா? என ஆவேசமாக கேள்வியை எழுப்பியவர், வளர்ச்சி என பேசுபவர்கள் அனல் மின்நிலையம் அருகே வீடு கட்டி வசிக்கட்டும், நாங்கள் அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்றுவிடுகிறோம் என தெரிவித்தார். சீமான் பேசிய போது எங்களுக்கு வாழ்வாதாரம் வேண்டும், சீமானே வெளியேறு என்ற எதிர்ப்பு கோஷம் கூட்டத்தில் இருந்து எழுந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கேட்டப்போது கருத்துக்கேட்பு என கந்துடைப்புக்கு நடத்துகிறார்கள், திமுக ஆட்களை அழைத்து வந்து எதிர்ப்பு கோஷம் போட செய்கிறது என்பதுதான் உண்மை என குற்றம் சாட்டினார்.