சென்னை விமான நிலையத்தில் நடிகர் தனுஷை வீடியோ எடுக்க விடாமல், செய்தியாளர்களை பவுன்சர்கள் தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரையில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் நடிகர் தனுஷ் சென்னை வந்தார். விமான நிலையத்தில், செய்தியாளர்கள் வீடியோ எடுக்க முயன்றனர். அப்போது, அங்கு இருந்த தனியார் பவுன்சர்கள், வீடியோ எடுக்க முயன்ற செய்தியாளர்களை தடுத்து தள்ளிவிட்டனர். உடனே, பவுன்சர்களை பார்த்து, விடுங்கள் என்று தனுஷ் கூறிவிட்டு காரில் ஏறி சென்றார். விமான நிலைய வளாகத்தில் போலீசார் தவிர தனியார் பாதுகாவலர்கள் வைக்க அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.