கரை உடைந்து 15 நாட்களாக வீணாகும் ஏரி நீர் - மக்கள் வைத்த முக்கிய கோரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஏரியின் கரை உடைந்து கடந்த 15 நாட்களாக தண்ணீர் வீணாகி வருகிறது.
மாரம்பட்டியில் உள்ள பெரிய ஏரி, அப்பகுதி மக்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்திற்கான நீராகவும் பயன்பட்டு வருகிறது. இந்நிலையில், ஏரியின் கரை உடைந்து, கடந்த 15 நாட்களாக தண்ணீர் வீணாகி வருகிறது. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.