டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்குள் நுழையுமா தென்னாப்பிரிக்கா?

Update: 2024-12-29 07:19 GMT

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வென்று, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தென்னாப்பிரிக்கா தகுதிபெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சென்சூரியனில் நடைபெறும் போட்டியில், முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 211 ரன்களும், தென்னாப்பிரிக்கா 301 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் 237 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு 148 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி மூன்றாம் நாள் முடிவில், 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தென்னாப்பிரிக்கா வெற்றி பெற இன்னும் 121 ரன்கள் தேவைப்படும் நிலையில், நான்காம் நாள் ஆட்டத்தில் வெற்றி பெற்றால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தென்னாப்பிரிக்கா முதல் அணியாக தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்