பிரபல கிரிக்கெட் வீரருக்கு கைது வாரண்ட் - அதிர்ச்சியில் ரசிகர்கள்கர்நாடாகாவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான ராபின் உத்தப்பா, தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பி.எஃப் பணத்தை ஊழியர்களின் பி.எஃப் கணக்கில் முறையாக செலுத்தவில்லை என புகார் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பி.எஃப் மோசடியில் ஈடுபட்டதாக உத்தப்பாவை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 23 லட்சத்து 36 ஆயிரம் ரூபாயை உத்தப்பா நிறுவனம்,, ஊழியர்களின் பி.எஃப் கணக்கில் செலுத்தவில்லை என கூறப்படும் நிலையில் உத்தப்பாவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவரை போலீசார் தேடி வரும் நிலையில், வருகிற 27ம் தேதிக்குள் ஊழியர்களின் பி.எஃப் தொகையை உரிய கணக்கில் செலுத்தாவிட்டால் உத்தப்பா கைது செய்யப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.