"3 நாடுகள் மட்டும்தான் டெஸ்ட் விளையாட வேண்டுமா?" - முன்னாள் கேப்டன் ஆவேசம்..
இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகள் மட்டும்தான் டெஸ்ட் விளையாட வேண்டுமா என தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் (greame smith)கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளுக்கு இடையே டெஸ்ட் போட்டியை அதிகப்படுத்துவது தொடர்பாக ஐசிசி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள கிரீம் ஸ்மித், 3 நாடுகளுக்கு இடையே மட்டும் டெஸ்ட் போட்டியை அதிகப்படுத்துவது மற்ற நாடுகளைப் பாதிக்கும் எனக் கூறினார். இப்படிப்பட்ட முடிவு நியாயமாக இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.