"கோலிக்கு எதிராக விளையாடியது"..மேட்ச் முடிந்த கையோடு கோன்ஸ்டாஸ் சொன்ன வார்த்தை | India
விராட் கோலி (VIRAT KOHLI) தனது ஆதர்ச நாயகன் என ஆஸ்திரேலிய தொடக்க வீரர் சாம் கோன்ஸ்டாஸ் (SAM KONSTAS) கூறியுள்ளார். கோலி மிகவும் பணிவான மனிதர் எனக் கூறியுள்ள கோன்ஸ்டாஸ், தனக்கும் தனது குடும்பத்திற்கும் கோலியை மிகவும் பிடிக்கும் எனக் கூறியுள்ளார். அடுத்த தொடரில் சிறப்பாக விளையாடும்படி கோலி தன்னை வாழ்த்தியதாகக் கூறிய கோன்ஸ்டாஸ்,,,, கோலி, பும்ராவிற்கு (BUMRAH) எதிராக விளையாடியது தனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் எனத் தெரிவித்துள்ளார். பும்ராவுடனான வாக்குவாதத்தில் தனது பக்கம் தவறு இருப்பதாகக் கருதுவதாகவும் கோன்ஸ்டாஸ் கூறியுள்ளார்.