17 நாட்களில் 10,000 வேலை... சென்னை, கோவை, திருச்சி, மதுரையில் உலக நிறுவனங்கள் - தமிழக இளைஞர்களே ரெடியா?

Update: 2024-09-14 05:40 GMT

17 நாள்கள் அமெரிக்காவுக்கான அரசு முறை பயணத்தில் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 7 ஆயிரத்து 616 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்...இதுபற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

2030ம் ஆண்டுக்குக்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் முதல்வர் ஸ்டாலின்...

அந்த வகையில் கடந்த மாதம் 27ம் தேதி அமெரிக்கா சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று 18 முன்னணி நிறுவனங்களுடன் 7616 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளார்...

அதன்படி மைக்ரோசிப் நிறுவனம் 250 கோடி ரூபாய் முதலீட்டில் ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் சென்னையில் செமிகண்டக்டர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது...

நோக்கியா 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமும் அமைக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது...

சூலூரில் செமிகண்டக்டருக்காக ஈஸ்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் 150 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது...

1000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் சென்னையில் பே பால் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு மையம் அமைக்கவுள்ளது...

உலகளாவிய விநியோக மையத்தை மதுரை மண்ணில் 50 கோடி மதிப்பில் இன்பிங்ஸ் ஹெல்த்கேர் நிறுவனம் உருவாக்கப்போகிறது...

சென்னையில் முதலீடு செய்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கவுள்ளது அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனம்...

ஓமியம் நிறுவனம் பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்காக செங்கல்பட்டில் 400 கோடியும்,

ஈட்டன் நிறுவனம் உலகளாவிய பயன்பாட்டு பொறியியல் மையத்திற்காக 200 கோடியும்,

ட்ரில்லியன்ட் நிறுவனம் உலகளாவிய உதவி மையம் மற்றும் உற்பத்தி மையத்திற்காக 2000 கோடியும்,

காஞ்சியில் சென்சார்ஸ் மற்றும் டிரான்ஸ்டியூசர்சுக்காக விஷய் பிரிஷிஷன் நிறுவனம் 100 கோடியும் ஒதுக்கி ஒப்பந்தம் போட்டுள்ளன...

செங்கல்பட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக லிங்கன் எலக்ட்ரிக் 500 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் போட்டுள்ள நிலையில்

சென்னை, கோவையில் மின்னணு உற்பத்தி மையம் அமைக்க விஸ்டியன் நிறுவனம் 250 கோடி ஒதுக்கியுள்ளது...

திருச்சியில் ஜாபில் நிறுவனம் மின்னணு பொருட்கள் உற்பத்திக்காக 2000 கோடி ஒதுக்கி 5000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கவுள்ள நிலையில்

காஞ்சியில் மின்னணு உற்பத்தி நிறுவன விரிவாக்கத்திற்காக ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனம் 666 கோடி ஒதுக்கியுள்ளது...

அதேபோல் சென்னையில் உலகளாவிய திறன் மையத்திற்காக அஷ்யூரன்ட் 200 கோடியும்,

திருள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரியில் கட்டுமான கருவிகள் உற்பத்தி நிலையத்திற்காக கேட்டர்பில்லர் 500 கோடியும்,

ஓசூரில் மேம்பட்ட மின்னணு மற்றும் டெலிமாடிக்ஸ் உற்பத்திக்கக RGBSI 100 கோடியும் ஒதுக்கியுள்ளது...

இதன்மூலம் மொத்தம் 10 ஆயிரத்து 965 வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன...

ஆப்பிள் நிறுவனத்தை பார்வையிட்டு, தமிழ்நாட்டில் ஆப்பிள் நிறுவனம் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்று அழைப்பு விடுத்தார்...

சிகாகோவில், BNY மெலன் வங்கியின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்...

ஃபோர்ட் நிறுவனம், மற்றும் ஐடிசர்வ் கூட்டமைப்பினரிடம் தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

அதேபோல், கூகுள் நிறுவனமும் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனமும் இணைந்து தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்களை அமைப்பது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது...

ஆட்டோடெஸ்க் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையேயும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது...

7616 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து அமெரிக்காவுக்கு குட்பை சொல்லிவிட்டு தாயகம் திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்...

Tags:    

மேலும் செய்திகள்