#JUSTIN | கர்நாடக பேரவையில் பாஜக கடும் அமளி - சபாநாயகர் மீது மசோதாக்களை கிழித்து எரிந்து ஆவேசம்
கர்நாடக சட்டபேரவையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. பொதுப்பணியில் சிறுபான்மையினருக்கு நான்கு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, கர்நாடக சட்டப்பேரவையில் ஒப்புதலுக்காக அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக உறுப்பினர்கள், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கம் எழுப்பினர். மேலும், மசோதா நகல்களை கிழித்து வீசி அவர்கள் அமளியில் ஈடுபட்டனர்.