ஜாமின் கிடைப்பதற்காகப் பொய் சொல்லி, உச்சநீதிமன்றத்தையே ஏமாற்றியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியில் தொடர எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் உடனடியாக செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்துவதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.