"Files-களை காட்டி மிரட்டிய Amitshah..அதிர்ந்து கூட்டணிக்கு சம்மதித்த EPS" - பகீர் கிளப்பிய Murasoli
இதுதொடர்பாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் வெளிவந்துள்ள கட்டுரையில், டெல்லி சென்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து சால்வை அணிவித்து மகிழ்ந்திருப்பதாகவும், அப்போது எடப்பாடி பழனிசாமியின் உறவினர் 650 கோடி ரூபாய் வரி முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை காட்டி, எச்சரிக்கை விடுத்து, பா.ஜ.க. கூட்டணிக்கு சம்மதிக்க வேண்டும்... இல்லாவிட்டால் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மிரட்டலுக்கு அஞ்சி, பா.ஜ.க.வோடு கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறிவந்த எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க.வுடன் கூட்டணிக்குச் சம்மதம் தெரிவித்து வந்ததாகச் செய்திகள் வெளியானதாக அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அ.தி.மு.கவின் மூத்த தலைவர்களின் ஊழல்கள் குறித்த ஆவணங்களை எடப்பாடி பழனிசாமியிடம் அமித்ஷா காட்டி எச்சரிக்கும் தொனியில் பேசியதாகவும், அமித்ஷா காட்டிய ஆவணங்களைப் பார்த்ததும் எடப்பாடி பழனிசாமியே அதிர்ந்துவிட்டதாகவும் கூறப்படுவதாக, அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நிதி தராமல் தொடர்ந்து வஞ்சித்துவரும் மத்திய பா.ஜ.க.வுடன் கூட்டுச் சேரப் பணிந்திருப்பது அ.தி.மு.க.வின் சுயநல ரூபத்தைத்தான் காட்டுவதாகவும், இது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல என்றும் முரசொலி நாளிதழில் வெளிவந்துள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.