``மின்துறை நஷ்டத்தில் இயங்குவது ஏன்?'' - அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி கேள்வி
அதிமுக ஆட்சியில் மின்கட்டணத்தை உயர்த்தாமல் இருந்தபோதும் 12 ஆயிரம் கோடி ரூபாய்தான் மின்வாரியத்துக்கு இழப்பு ஏற்பட்டதாகவும், திமுக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி 20 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் வரும்போது,, மின்துறை எப்படி நஷ்டத்தில் இயங்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பியுள்ளார். சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, நாமக்கல் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரியை, முதலமைச்சராக இருந்தபோது எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்ததாகவும், மருத்துவமனையைத் தான் திமுக அரசு திறந்து வைத்ததாகவும் விளக்கம் அளித்தார். தொழிற்சாலைகள் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு ஏதுவாக, தொழிலாளர்கள் பிரச்சினைகளுக்கு அரசு தீர்வு காண வேண்டும் என்றும் தங்கமணி கூறினார்.