போயும் போயும் 4 வயது சிறுமியிடம்..பாத்ரூம் சென்ற குழந்தையை டிரெஸ்ஸை கழட்டி.. | Telangana
தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள மொயினாபாத்தில், வீட்டின் அருகே உள்ள கழிவறைக்கு சென்ற நான்கு வயது சிறுமியை அங்கிருந்த மர்ம நபர் ஒருவர் தூக்கி சென்றுள்ளார். மறைவான இடத்தில் வைத்து சிறுமியின் ஆடைகளை கலைந்ததால் பயந்து போன சிறுமி சத்தம் போட்டு உள்ளார். அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பெற்றோரைக் கண்ட காமக்கொடூரன், தனது ஆடைகளை சரி செய்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். உடனே பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் அவனை துரத்தி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர், அவனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். முதற்கட்ட விசாரணையில் அந்த காமக்கொடூரன் சிலக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த யஷ்வந்த் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.