காஷ்மீரில் வெறிகொண்டு வேட்டையாடும் குரங்குகள்..பதறி ஓடும் மக்கள் - மருத்துவமனையில் சொன்ன பகீர் தகவல்
ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் கடந்த ஆறே மாதங்களில் கிட்டத்தட்ட 25 பேர் குரங்குக் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது... குரங்கு கடித்தால் ரேபிஸ், HERPES B வைரஸ், மற்றும் பல தொற்றுகள் வர வாய்ப்புள்ளது...
குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லவே அச்சம் அடைந்துள்ளனர். நாளுக்கு நாள் குரங்குக் கடியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது...