``கூடிய CBI, ED, IT... விரைவில் டெல்லி முதல்வரை கைது செய்ய திட்டம்..'' `- கெஜ்ரிவால் அதிர்ச்சித் தகவல்
கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக எந்த பணியையும் மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டிய அரவிந்த் கெஜ்ரிவால் தன்னை அவதூறு செய்தும் விமர்சனம் செய்து, அதன் பெயரால் பாஜக வாக்குகளை கேட்பதாக குற்றம் சாட்டினார். தாங்கள் 10 ஆண்டுகளில் மேற்கொண்ட பணியின் அடிப்படையில் வாக்களிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டார். தனக்கு கிடைத்த தகவலின் படி சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை ஆயிற்றுக்கிடையே அண்மையில் கூட்டம் நடைபெற்றதாகவும், அதில் டெல்லி முதல்வர் அதிஷிக்கு எதிராக ஏதேனும் ஒரு போலியான வழக்கை புனைந்து, அவரை கைது செய்ய அறிவுறுத்தப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.