ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அதிக புள்ளிகள் எடுத்த இந்திய பந்துவீச்சாளர் என்ற அஸ்வினின் சாதனையை ஜஸ்ப்ரீட் பும்ரா சமன் செய்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட்டில் 9 விக்கெட் வீழ்த்திய பும்ரா, சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்ததோடு, 900 புள்ளிகளை கடந்து சாதனை படைத்தார். இதற்கு முன் இந்திய தரப்பில் 2016ஆம் ஆண்டு ரவிச்சந்திரன் அஸ்வின் 904 புள்ளிகள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்து வந்த நிலையில், அதனை பும்ரா சமன் செய்துள்ளார்.