லாட்டரி மார்ட்டினின் ஐபோன் டேட்டாக்கள் - அதிர்ச்சியில் அமலாக்க துறை

Update: 2024-12-25 09:46 GMT

சிக்கிம் மாநில லாட்டரி விற்பனையில் 910 கோடி ரூபாய் முறைகேடு செய்தாக தொழில் அதிபர் மார்ட்டின் மீது அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் உள்ள மார்ட்டின் வீடு, அலுவலகம் மற்றும் ஓமியோபதி கல்லூரி ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த கடந்த மாதம் சோதனை நடத்தி கம்ப்யூட்டர்கள், செல்போன்கள் மற்றும் ஆவணங்களை கைபற்றினர். இந்நிலையில், சோதனையில் கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்களில் மருத்துவ ஆவணங்கள், கடவுச்சொற்கள், வணிகம் சார்ந்த முக்கிய தரவுகள் உள்ளதாக கூறி, இவற்றை ஆய்வு செய்ய தடை விதிக்க கோரி மார்டினின் நிறுவனங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வாறு ஆய்வு செய்வது அந்தரங்க உரிமையை பறிப்பதாகும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு அண்மையில் விசாரித்தது. சோதனையில் கைப்பற்றப்பட்ட மார்ட்டின், அவரது உறவினர்கள், ஊழியர்களின் மின்னணு சாதனங்களில் இயக்கி, தரவுகளை பதிவிறக்கம் செய்ய அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து, ரிட் மனுவுக்கு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்